10:32 PM

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 2

தவம் என்பது ஒருமுகப்பட்ட சிந்தனை.--கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்.


உங்கள் மனதையும், உங்கள் புத்தியையும் தனித்தனியே உற்றுப்பார்க்க கற்றுக்கொண்டால் இதனுடைய வலிமைகளும் அட்டகாசங்களும் உண்மைகளும் உங்களுக்குப் புரிய வரும். -ப்ரகலாதன்,கதை கதையாம் காரணமாம்.


ஒருமைப்படுதலும் தூக்கமும் அருகருகே உள்ள விஷயங்கள் - கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்.


கர்வமுள்ளவர்களால் சாதரண மக்களைக்கூட புரிந்து கொள்ள இயலாது.-கொங்கணவர்,கதை கதையாம் காரணமாம்


இளமை நேரத்தில் 'முதுமை என்றால் என்ன' என்று யோசிப்பது எல்லோருக்கும் கிடைக்காது. கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.-யயாதி,கதை கதையாம் காரணமாம்


துன்பம் நேரும்போது இறைநினைப்பை பலபபடுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும். இதற்க்கு பக்திதான் எளியவழி.பக்தி என்பது பாசாங்கற்ற எளிமை.-அம்பரீஷன், கதை கதையாம் காரணமாம்.


மனம் முழுவதும் இறையில் ஒன்றிக்கிடப்பவனுடைய தினசரி வாழ்க்கை இறைவனால் நடத்தப்படும்.-அம்பரீஷன்,கதை கதையாம் காரணமாம்.


தன்னை அறிந்தவன் மரணத்தைக் கண்டு அஞ்சுவதே இல்லை.அவனால் மரணத்தை தள்ளி வைக்கவும் கூடும். - சக்கரவாஹம்.


பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.--என் கண்மணித்தாமரை.


காமம் அமிர்தம். அமிர்தம் என்பது ஒருவகை மருந்து. அளவு மிஞ்சக்கூடாது. அடிக்கடி உண்ணக்கூடாது.- என் கண்மணித்தாமரை.


மனம் ஒரு மோசமான மிருகம். அது மயங்கி இருக்கும்போதே ஒரு கடிவாளம் போட்டு விட வேண்டும்.-என் கண்மணித்தாமரை


இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆணின் அகங்காரமும் அதிகமாக வெளிப்படுகின்ற இடம் மனைவியின் மீது தான் - என் கண்மணித்தாமரை.


தியானத்திற்கு அடிப்படை பக்தி, பக்திக்கு அடிப்படை பணிவு. பணிவுக்கு ஆதாரம் சத்சங்கம். நன்மக்கள் கூட்டம் - என் கண்மணித்தாமரை


கடவுள் அறியாதவன்தான் கடவுளை இழிவு படுத்துவான். தன் மதத்தை அறியாதவன்தான் பிறர் மதத்தை கேலி செய்வான்.- என் கண்மணித்தாமரை.


குரு என்பதும் கடவுள் என்பதும் வெவ்வேறல்ல.கடவுளின் நேரடியான ரூபம் குரு.-குரு வழி.


ஒரு மனிதனின் பிறப்புக்கு மாதாவும் பிதாவும் காரணம்.வளர்ச்சிக்கு குரு காரணம்.- குரு வழி.


குரு என்பதற்கு அர்த்தம், சந்தோஷம், நம்பிக்கை, காரிருளில் ஒரு கைவிளக்கு. - குருவழி.


எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக்கனிவான அக்கறை ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சினையை அணுகவும் தெரிந்து விடுகிறது.- சூரியனோடு சில நாட்கள்.


பிறப்பும் இறப்பும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடுகின்றன. இவை எப்போது எங்கே நிகழும் என்று தெரியாத வேதனைதான் மனிதனை மதம் என்கிற ஊன்றுகோல் தேடவைக்கிறது. கடவுள் என்கிற கானல் நீர் நோக்கி போக வைக்கிறது.
-சுக ஜீவனம்


கோபத்தாலோ, வெறுப்பினாலோ, அன்பினாலோ காதலினாலோ நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்.-பட்டாபிஷேகம்.


காமத்தால் உந்தப்பட்ட போது எல்லா அபத்தங்களும் ஞாயப்படுதப்படும். -பட்டாபிஷேகம்


காமம் மறைமுகமாய் பல்வேறு பொய்களோடு கலந்து வருவதால்தான், அதைக்கண்டு சாதுக்களும் ஞானிகளும் மிரண்டு ஒதுங்குகிறார்கள்.-பட்டாபிஷேகம்.


காமம் என்கிற உணர்வு புலி போல் மனிதர்கள் மீது பாய்ந்து அவர்களை உண்ண ஆரம்பித்து விடுகிறது.-பட்டாபிஷேகம்.


ஒருவர் பேசவும் எழுதவும் செய்கிறவரை அவருக்கு ஞானம் வரவில்லை என்பதே பொருள்.- பாலகுமாரன் பதில்கள்,பட்டாபிஷேகம்


அதிகாரம் கொடி கட்டிப் பறக்குமிடத்தில் அன்பான கெஞ்சல்கள் எடுபடாது. அங்கே அன்பு காட்டுதல் அவமரியாதை போல் ஆகிவிடுகிறது. -ஒன்றானவன்,சிறுகதை.


இறைவனுடைய எல்லா செயல்களும் விளையாட்டுத்தான்.விளையாட்டாய் உணர்த்தப்பட்ட வேதம்தான்.புரிந்துகொள்ளத்தான் பொறுமை வேண்டும்.-ஒன்றானவன்,சிறுகதை.


எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததன் விளைவு.-திருப்பூந்துருத்தி.


சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லா சலனங்களும் தவறுதான். சலனமற்றிருத்தலே உத்தமம்.- திருபூந்துருத்தி.


மரணத்தைக் கண்டு பயமில்லாது இருப்பவனே சந்தோஷமான மனிதன்.-திருப்பூந்துருத்தி.


கடவுளைத் தெரிந்தவருக்கு தன்னைத் தெரியும். தன்னைத் தெரிந்தவருக்குக் கடவுள் புரியும்.-திருப்பூந்துருத்தி.


"பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்"
-பச்சை வயல் மனது


பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 1

2 comments:

சிகபாலன் said...

hi...nice work everything if nice...but

"பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்"

this one is not by bala....this one is kavingar kanadasan words...

Jayakanthan R. said...

Thank you for your information Mr. Balan