3:27 AM

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 4

மலர்ச்சியாக உலகத்தில் தெரிகின்ற பெண்ணுக்கு அடிவேர் ஆண்தான்.அந்த அடிவேர் உற்சாகமாக இருக்கவேண்டுமென்றால் பசுமையான செடி மிக முக்கியம்.மலர்கள் மிகமுக்கியம். இதுதான் வாழ்க்கை.
-உத்தமன்


ஆத்திரப்படுபவன் திறமை இருந்தாலும் அசிங்கப்படுவான்.
-உத்தமன்.


உண்மையான வீரன் என்பவன் தன்னை ஜெயித்தவன்.தன்னை ஜெயித்தவனை எவனும் ஜெயிக்க முடியாது. பரசுராமரிடம் ஜமதக்னி முனிவர்.
-உத்தமன்.


காமம் என்ற குதிரையைக் கடிவாளமிட்டு நெறிப்படுத்தியவன் வாழ்க்கையில் மலர்ந்திருப்பான்.
-காதல் ரேகை.


கட்டுப்பாடற்ற காமத்தையே உலகம் காதல் என்கிறது. காதல் என்பது விட்டுக்கொடுத்தல். உடனடியாக. எந்த எதிர்பார்ப்புமின்றி. இது வேத வாக்கியம்.
-காதல் ரேகை.


உண்மையான நேசம் மதுவைவிட போதையானது.
-காதல் ரேகை.


அருள் என்பது அன்பால் உண்டாவது. அன்பு உண்டாக கடவுள் அருள் வேண்டும். அருளும் அன்பும் உடையது காதல்.
-காதல் ரேகை.


இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களுக்கு மனம் என்பது இல்லை.
-கருணை மழை.


உன்னை அறியாதவரை உன் உணர்வுகளையும் அறிய முடியாது.
-திருப்பூந்துருத்தி.


தியாகம் தொண்டு என்கிற வார்த்தைகள் அகந்தை விசயம். இந்த அகந்தை இன்னும் அகந்தையை வளர்க்கும். தொண்டு செய்ய செய்ய கர்வம் வரும். தியாகம் செய்ய செய்ய திமிர் வரும். இவையிரண்டும் தவறான விஷயங்கள் இல்லை. செயல்பாட்டில் கவனம் வேண்டும். தியாகம் செய்கிறோம் என்று யோசிப்பு வந்துவிட்ட நேரம் அது விஷமாகிறது. தொண்டு செய்கிறேன் என்று ஒருவன் உணர்ந்து நடக்கும் பொது எதிர்பார்ப்பு வந்து விடுகிறது.
-சிநேகமுள்ள சிங்கம்


இயல்பாய் இருத்தலே ஞானம்.அதுவே அமைதி.
-குரு.


நீ எங்கோ திருடினால் உன் பொருள் எங்கோ திருட்டுப் போகிறது. இது அமைதியான ஒரு விதி. கண்களுக்குப் புலப்படாத ஒரு சட்டம்.
-குரு.


உண்மையாய் இருப்பதுதான் சுயபலம். ஞானத்தின் அடித்தளம். அப்போது பேச்சும் செயலும் மிக மிகச் சுதந்திரமாக இருக்கும். அந்தச் சுதந்திரம் எவரையும் காயப்படுத்தாது இருக்கும்.
-குரு.


சரணாகதி என்பது குருவைப் பூரணமாக நேசித்தல்.குருவைத் தன் உணர்வுகளோடும் கலக்கவிடுதல். சிலசமயம் உள்ளுக்குள் குருவாகவே மாறுதல்.
-குரு.


தன்னை ஆழ்ந்து பார்கிறவருக்கே, தன்னுள் யார் பார்க்கிறார்கள் என்கிற கேள்வி உள்ளவருக்கே குருவின் விலக்கலால் ஞானம் சித்திக்கும்.
-குரு.


நல்ல குரு அதிகம் பேசுவதில்லை. பிரசங்கிகளால், நல்ல குருவாக மாற முடிவதில்லை.
-குரு.


சக்தி மிகுந்த குரு இருக்கும் இடத்தில் அமைதி தளும்பி நிற்கும். அருகே போய் நிற்க மனமாற்றம் ஏற்படும்.
-குரு.


உணவு ருசி உடம்பை அடுத்த அகங்காரம். தன்னை உடம்பாகக் கொள்ளும்போது, உணவாட்டம் வெறியாய் போய்விடுகிறது.
-குரு.


"Life Is Relationship" பிறரோடு தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை.பிறரோடு உள்ள தொடர்புகளில் ஏற்படும் சிக்கல்தான் மொழி, இன, மத சண்டைகளுக்கெல்லாம் காரணம்.
-குரு.


மனம் பற்றி யோசிக்கிறவனுக்குத்தான் ஆன்மா புலப்படும். தன் மனம் தெரியாதவனுக்கு பிறர் மனம், உணர்வு எதுவும் தெரியாது.
-குரு.



பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 3

0 comments: