4:35 AM

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 5

ஒரு சக்தி வாய்ந்த குரு, உடம்புக்கப்பால் நம்மை அழைத்துப் போய்விடுகிறார். அவருடைய மனோசக்தியினால், நம் மனோசக்தியை அதிகரிக்கிறார். உலுக்கி எழ வைக்கிறார்.
-குரு.


அன்பைச் சொல்ல வேண்டாம. செயலாக்க முயற்சிக்க வேண்டாம். அன்பாகவே மாறிவிடுதல் அன்பை எளிதில் உணர்த்திவிடும்.இன்னும் திடமாய் உணர்த்திவிடும்.
-குரு.


வாழ்வு விட்டுக்கொடல். விட்டுக்கொடல் புரிதலின் முதல் செயல்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.


வியப்பாக வாழ்கையைப் பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.


இடைவிடாமல் கற்றுகொள்பவருக்குத்தான் வாழ்க்கை வியப்பாக இருக்கும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.


உலகத்தில் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றி தங்களுக்குத் தெரியவேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களால் தான் கற்றுக்கொள்ள முடியும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.


சொல்லிக்கொடுப்பவனை விட கற்றுக்கொள்பவனுக்குதான் ஞானம் வேண்டும்.
-கற்றுக்கொண்டால் குற்றமில்லை.


ஆசை நிற்க கற்றல் நிற்கும்.கற்றல் நிற்பதே அமைதியான நிலை.இந்த அமைதியே உத்தமம். இதுவே நிறைவு.ஆனால் கற்றல் எப்போது நிற்கும்? கற்றபிறகே. ஆசை எப்போது அடங்கும்? அனுபவித்த பிறகே.


யார் சுயமான சிந்தனையோடு எந்நேரமும் விழிப்போடு இருக்கிறார்களோ அவர்களே தலைமையேற்க முடியும். இந்த உணர்வு இருந்தால் தான் நாம் கடவுளை அறிதலோ, கருணையோடு இருத்தலோ, நல்லது செய்தலோ,செய்யாதிருத்தலோ முடியும். இதுவே நம் முதல் குணமாக இருத்தல் வேண்டும்.
-காசும் பிறப்பும் - 2.


மனிதர் மனிதரை நம்புவதும், மனிதர் கடவுளை நம்புவதும் நம்புவதும் ஒன்றே. எதை நம்புகிறோம் என்பது முக்கியமில்லை.நம்பிக்கை என்பதே இங்கு முக்கியம்.
-திருபூந்துருத்தி.


நம்புவதால் ஏற்படுகிற பயமின்மையும், பயமின்மையால் ஏற்படும் சந்தோஷமும், சந்தோஷத்தால் ஏற்படும் உறுதியும் மனிதனுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் கம்பிரத்தைக் கொடுத்துவிடுகின்றன. அப்பட்டமான தோல்வியைக்கூட புன்சிரிப்புடன் ஏற்க வைத்துவிடுகின்றன.
-திருபூந்துருத்தி.


தோல்வி என்பது பெரிய விஷயமே அல்ல.தோல்வி வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி, அது வந்துவிட்டபோது ஏற்படும் மனத்துவளலே முக்கியமான விஷயம்.


நம்பிக்கை உள்ளவருக்கு மனத்துவளல் ஏற்படாது.துவளல் இல்லாத வாழ்க்கை சந்தோஷமானது.
-திருப்பூந்துருத்தி.


பலமுள்ளவர்கள் பலகீனர்களைப் பார்த்துக் கத்துவதே கோபம். பலம் உள்ளவன் பலம் குறைந்து பலகீனர்கள் அதிகரிக்கும்போது அந்தக் கோபதுக்குரிய மரியாதை கிடைத்துவிடுகிறது.
-திருப்பூந்துருத்தி.


ஆசை என்கின்ற மது அருந்தி அல்லாட்டம் போடும் மனிதர்களிடையில் ஆசையற்று இருப்பவன் தெளிவுள்ளவன்.
-திருப்பூந்துருத்தி.


எவனொருவன் தன்னுள் தன்னைக் காண்கிறானோ அவனுக்குப் பழம் நினைவுகள் வரும். எவனொருவனுக்குப் பழம் நினைவுகள் வருகின்றனவோ அவன் இன்னமும் உள்ளே போகமுடியும்.
-திருப்பூந்துருத்தி.


உபதேசிப்பது எளிது. உபதேசத்தைப் புரிந்துகொள்வதுதான் கடினம்.புரிந்து கொள்ளுதலையும் ஜென்ம ஜென்மமாய்ப் பழகவேண்டும். இப்போது ஆரம்பித்தால்தான் பின்வரும் காலங்களிலாவது பிறப்பு அறும்.
-திருப்பூந்துருத்தி.


ஆசையக் கிள்ளி எரிய வியாதியில்லை. காமத்தைக் கிள்ளி எறிய பிறவி இல்லை. இரண்டும் ஒன்றே.
-திருப்பூந்துருத்தி.


வயது என்பது அனுபவம்.அனுபவம் என்பது நடந்த நிகழ்வுகளிலிருந்து புத்திக்கு வரும் தெளிவு. தெளிவின் வெளிப்பாடு அமைதி.
-இனிது இனிது காதல் இனிது.


பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 4

3 comments:

நிகழ்காலத்தில்... said...

பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களில் வாழ்க்கையில் உன்னிப்பாய் கவனித்து பின்பற்ற வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கும்,

அதை தேர்ந்தெடுத்து தாங்கள் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியே

தொடரட்டும் பணி

வாழ்த்துக்கள்

Jayakanthan R. said...

உங்கள் உற்சாகமூட்டுதலுக்கு நன்றி...

Ladha said...

hi friends..
you are doing a very great job...
Keep it up..