11:43 PM

வாசகர்களுக்கு ஒரு செய்தி!

தற்பொழுது இந்த தளம் முகவரி மாற்றப்பட்டு இந்த முகவரியில்இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய முகவரி www.writerbala.blogspot.com

என்றும் அன்புடன்
ஜெயகாந்தன்...

11:46 PM

இரும்பு குதிரைகள்

"இரும்பு குதிரைகள்" கவிதைகள்.
-------------------------

"சவுக்கடிபட்ட இடத்தை
நீவிடத் தெரியா குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம்தானென்று
கதறிட மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தை குதிரை அறியும்"

-------------------------

"நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை
ஏனைய உயிர்கள் போல
நிற்கையில் கண்கள் மூடி
களைப்பினைப் போக்கும் குதிரை
தொட்டதும் விழித்துக் கொள்ளும்
தொடுதலைப் புரிந்து கொள்ளும்
தூங்குதல் பெரிய பாவம்
தூங்கவா பிறந்தீர் இங்கு?
வாழ்வதோ சிறிது நாட்கள்
அதில் சாவினை நிகர்த்த தூக்கம்
புரிபவர் பெரியோர் அல்லர்
வாழ்பவர் தூங்க மாட்டார்.
குதிரைகள் கண்கள் மூடி
குறி விரித்து நிற்கும் காட்சி
யோகத்தின் உச்சகட்டம்
நெற்றிக்குள் சந்திரபிம்பம்"

-------------------------

"நீர் குடிக்க குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுவது மிருகம் என்பார்
சீர் குணம் அறிய மாட்டார்
வேறொன்று குடிக்கும்போது
தான் கலக்கல் கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில் குழந்தை ஜாதி
கால் வைத்த இடங்கள் எல்லாம்
பூ முளைக்கும் இடமென்றெண்ணி
குளம்பது விளிம்பில் நிற்கும்
குதிரையா மிரளும் மிருகம்
குதிரையின் குளம்பைப் பாரும்
இடுக்கிலே ரோமம் சிரிக்கும்"

-------------------------

"குதிரைகள் பயணம் செய்யா
கூட்டமாய்ப் பறவை போல
இலக்குகள் குதிரைகளில்லை
முன்பின்னாய் அலைதல் தவிர
குதிரையை மடக்கிக் கேளு
போவது எங்கே என்று
புறம் திரும்பி அழகு காட்டும்
கேள்வியே அபத்தம் என்று
இலக்கில்லா மனிதர் பெரியோர்
உள்ளவர் அடைய மாட்டார்"

-------------------------

"புணர்ந்த பின் குதிரைகள்
ஒருநாளும் தூங்கியதில்லை
பிடரியைச் சிலிர்க்க ஓடும்
பின்னங்கால் வயிற்றில் மோத
மனிதரில் உயர்ந்தவர்கள்
மறுபடி குதிரையாவார் மறுபடி
மறுபடி குதிரையாகி
மனிதரைக் காண வருவார்"

-------------------------

"குதிரைகள் பசுக்கள் போல
வாய்விட்டுக் கதறுவதில்லை
வலியில்லை என்பதல்ல
வலிமையே குதிரை ரூபம்
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்காகப் பணிந்து போகும்"

-------------------------