11:38 PM

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 1

நமது தளத்தில் எழுத்து சித்தரின் சிந்தனைகளை அவரின் வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் எழுத்து சித்தரின் சிந்தனைகளை பதிவு(type) செய்து நமது தளத்தில் பதிவு செய்ய அனுப்பவேண்டிய முகவரி "universalkanth@gmail.com".

அன்புடன் ஜெய்காந்த்,
நன்றி.

***


மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.


அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை,
வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்.


உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றை விட ஒன்று
உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம்.
உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை
சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய
இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே.
இதில் கர்வப்பட ஒன்றுமில்லை.
--- குன்றிமணி


விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது
அடக்கமும் அல்ல, சூழ்நிலையின் உண்மையை தனது
வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.


ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே
தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது
மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான
விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை
கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.
--- சுழற்காற்று


குரு தேவை என்று வேண்டுபவன் செய்ய வேண்டிய
முதல் வேலை குருவைத் தேடுவதல்ல, தனிமையில் இருப்பது.
--- குரு


எந்த இடத்தில உன் மனம் அமைதியாகிறதோ அதுவே
க்ஷேத்திரம். எந்த இடத்தில உனக்கு நிம்மதி கிடைக்கிறதோ
அதுவே கோவில்.
--- உத்தமன்


உங்களைப் பற்றி சிந்திக்க சிந்திக்க உங்கள் பலமும்
பலவீனமும் தெரியும். எப்போது இவை தெரிகிறதோ
அப்போது உங்கள் பலத்தை நீங்கள் உயர்த்திக்கொள்ள
முடியும். உங்கள் உடல்பலம், மனோபலம், புத்திபலம்
உயர உங்கள் வாழ்க்கை நிலையும் உயரும்.
--- கதை கதையாம் காரணமாம்.


"கோபம் என்பது இயலாமையின் வெளிப்பாடு, கோபத்தை
தாங்கும் சக்தியும் தாக்கும் சக்தியும் நிரம்பியவர்கள் கோபப்படுவதில்லை"
-கடற் பாலம்.


ஞானம் எல்லோருக்கும் கிடைக்கும் எளிதான
விஷயமில்லை. உள்ளே தன்னைப் பற்றி இடைவிடாது
கவனித்துக்கொண்டிருப்பவருக்கே இது கைகூடும்.
--- உறவில் கலந்து உணர்வில் நனைந்து.


அமைதியே வலிமை. அன்பே அமைதியின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு அடக்கம்.
--- என்னுயிர்த் தோழி


வாழ்க்கை என்கிற கரிய உயரமான வலுவுமிக்க
யானையோடு வரும் யானைப்பாகனுக்கு
குரு என்று பெயர்.
--- உறவில் கலந்து உணர்வில் நனைந்து.


எண்ணம் தூய்மையாக இருந்தால் செயலும் தூய்மையாக
இருக்கும். தூய்மையான எண்ணத்தில் இறைவனுடைய
இருப்பு நிச்சயமாக இருக்கும்.
--- மனக்கோவில்.


குருவினுடைய் அன்பு ஒரு தாயின் அன்பைக்காட்டிலும்
பல மடங்கு பெரியது.
---தோழன்.


குருவினுடைய கருணை தெய்வத்தின்
கருணையைக்காட்டிலும் பல ஆயிரம் மடங்கு
வேகமாகப் பொங்கக் கூடியது.
---தோழன்.


மனிதன் என்பவன் உடம்பல்ல. அதுவொரு மகத்தான சக்தி.
ஆத்ம சொரூபம்.
--- தோழன்.


சுவாசிப்பது சரியாக இருந்தால் எண்ணமும் சரியாக
இருக்கும். சுவாசமும் எண்ணமும் ஒன்றுகொன்று
பிண்ணிப் பிணைந்தவை.
-- சிறுகதைகளும் கட்டுரைகளும்.


-தொடரும்

20 comments:

bharathi.spel said...

Good Collection!

Gr8 Jayakanth!

thank you!

Jayakanthan R. said...

Thank you for your command Mr. Bharathi...

Jayakanthan R. said...

Hai Geetha Justin, sorry for the inconvenience...yes im a gr8 fan of bala sir..

thank you for your command. I didn't have any tamil software tats y I have used orkut scrap book, there is lots of difference between tamil software, but i can do it clearly....

thank you again..

With Regards
Jaikanth

Prabu said...

one more thought that is so simple yet powerful..'Thodarbu Kolluldhale Vaazhkkai' - This is such an amazing statement that establishes relationships and the mutual touch which is the essence of life without which people will be living alone even if they exist in a group

Jayakanthan R. said...

நன்றி பிரபு.

valli devi said...

hai iam a ver big fan of bala,
bala is my guru he thought so many things through his novel i love u bala so much you know i am only 25yrs old, but still i used call him as bala to others because he is my friend, guru, mother, and teacher .
i wish him a great health and in my life time i want to see him atleast before my death.
i would like to thank bala to gave me such a wounderful guru "yogi ram surathkumar" and i want thank god for introduce me bala.
i love u bala
valli devi

Jayakanthan R. said...

Thank you very much Mr. Saravanan, ill correct it, keep visiting this site and if you get any news about our bala sir then tell me ill put it here....

அன்புடன்
ஜெய்காந்த்

A.S.RAVIEE said...

excellent collections...what to say............ tnks

A.S.RAVIEE said...

excellent informations.great collections..... tnks

Siva said...

Hi, Lot of thanks for an uncoming such blog. My full life is with him only. But so far never ever talked or even wrote a letter to him,

Excellent post - Now i am in mumbai

can u post how to get in touch with him over phone or address to write a letter. As now i have settled down i want to say atleast thanks for the life what i have today.
reg,
sivaganesan

vishwa said...

Dear Jaikanth,

"Many hands and hearts and minds generally contribute to anyone's notabl achievements." - Walt Disneys.

Great Effort.

Regards,
Vishwa.

Jayakanthan R. said...

thank you anand, siva and vishwa.

soundi said...

en iniya manaseega guruvana balakumararuku vannakam... en kanmanithamarai valvi, anbin velipadu... thangalai orumuraiyavadu darisithuvidavendum enbadu en valvin nokamaga karudugiren..guru arul adarku kidaikattumaguga..

ஜோதிஜி said...

வாழ்த்துகள்

தேவியர் இல்லம் திருப்பூர்

saravanan said...

Hi, I am a follower of Mr.Balakumaran's Novels. You have done a great job, like collection of his thoughts. Please do continue this. This will be very much useful to us who likes Mr.Balakumarana's novels.

Thakns/Regards,
Saravanapriyan.C

Jayakanthan R. said...

Thank You Mr. Saravanan....

Jayakanthan R. said...

வருகைக்கு நன்றி ஜோதிஜி...

lakshmi said...

Great Work Mr.Jayakanthan. Keep it up. I am bit late to view your website. I should have browsed it earlier......... I really enjoyed reading it. I too one of the fan, (like you people )of this great legend.
Chidambaram

Jayakanthan R. said...

Thank you Mr. Chidambaram....

sriram said...

dear bala sir! i wish u MANY MORE HAPPY RETURNS OF THE DAY!


BY

K.SRIRAM
SRIRANGAM