6:59 AM

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 13

எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
-கற்பூர வசந்தம்


பணப்பித்தும், பெண் பித்தும், நிலப்பித்தும் கொண்ட ஊரில் தெளிந்தவன் பித்தாய் தெரிவான். ஆடை இல்லா ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
-கற்பூர வசந்தம்


கடல் உண்டெனில் சுறா உண்டு. ஆனந்தம் உண்டெனில் அவலமும் உண்டு. சிவநெறியே வாழ்க்கை எனில் சோதனையும் உண்டு.
-கற்பூர வசந்தம்


தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
-கற்பூர வசந்தம்


யோகம் பயில்வதும், ஆகம அனுபூதியும் தராத முக்தியை ஆறு நாளின் அன்பு தரும். தன்னுள் முழுமையான அன்பு ஒன்றே தரும்.
-கற்பூர வசந்தம்


ஒழுக்கமும் வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம். கல் தடுக்கும் நேரம் போதும் உயிர் பிரிய, ஒழுக்கம் தவற.பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும், தவறிய ஒழுக்கம் சரி செய்வதும் நடக்கும் காரியமா?போனது போனதுதான். தவறியது தவறியதுதான்.
-கற்பூர வசந்தம்


கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
-கற்பூர வசந்தம்


வழிபடல் என்றால் ஒரு பாதையாய் நடத்தல். எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தலே வழிபடல். அப்போது மனசு விசாலமடைகிறது. மனசு விசாலமானால் போதும், அதன் விளைவு சொல்ல முடியாது. அது இல்லாமல் நீ என்ன பாய்ச்சல் பாய்ந்தாலும் வளர முடியாது. துவங்கின இடத்தில் நீ நிற்பாய்.
-கற்பூர வசந்தம்


பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 12

0 comments: